இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வையொட்டி எமது காரியாலயத்திலும் சுதந்திர தின நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே பேருசிங்ஹ தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் அவர் மூலம் தேசிய கொடியேற்றப்பட்டு சுதந்திர நிகழ்வின் முக்கியத்துவம் பற்றிய ஒரு உரை நிகழ்த்தப்பட்டதுடன் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் விதமாக 2 நிமிட மௌன அஞ்ஞலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது சிறுவர் பாதுகாப்பு உத்தியொகத்தர் திரு. அதுல ஶ்ரீ மஹாநாம அவர்களால் சுதந்திர நிகழ்வும் எமது பொறுப்பும் என்ற தலைப்பில் ஓர் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத்தொடரந்து மர நடுகை நிகழ்வொன்றும் சிரமதான நிகழ்ச்சியும் காரியாலய வலாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
























