எதிர்கால இலக்கு

நல்லாட்சி மூலம் நாளைய தினத்தினை வெல்வோம்.

சேவைக்கூற்று

அரசினது கொள்கைகளுக்கு அமைவாக சேவை வழங்குதல், வள இணைப்பினை மேற்கொள்வதோடு மக்களது ஈடுபாட்டுடன் கூடிய வினைத்திறன் மிக்க வேலைத்திட்டத்தின் மூலம் தும்பனை பிரதேச செயலகத்திற்குற்பட்ட மக்களது வாழ்க்கைத்திறனை அதிகரித்தல்.
 
 
மத்தியமாகாணத்தின் வடமேல் பகுதியின் வடஅகலாங்குக் கோடு 7'20-7'25 இற்கும் கிழக்கு நெட்டாங்கு 80'25-80'35 இற்குமிடையில் அமைந்துள்ள தும்பனை பிரதேச செயலகப் பிரிவானது வடக்கில் பூஜாபிட்டிய பிரதேசசெயலகப் பிரிவினது எல்லை மற்றும் குருணாகல் மாவட்ட எல்லையையும் கிழக்கில் பூஜாபிட்டிய,ஹாரிஸ்பததுவ பிரதேசசெயலகப் பிரிவினது எல்லையையும் தெற்கில் ஹாரிஸ்பத்துவ,ஹதரலியத்தை பிரதேசசெயலகப் பிரிவினது எல்லையையும் மேற்கில் ஹதரலியத்தை பிரதேச செயலகப் பிரிவினது எல்லையையும் குருணாகல் மாவட்ட எல்லையையும் எல்லைகளாக கொண்டமைந்துள்ளது.
 
1975 ல் செய்யப்பட்ட நிருவாகரீதியான பிரிப்பிற்கேற்ப தும்பனை பிரதேசசெயலகப் பிரிவானது 40 கிராமசேவகர் பிரிவுகளைகொண்டிருந்ததோடு தற்போது இரண்டு பிரதேச செயலகங்களாக செயற்படும் தும்பனை பிரதேசசெயலகம் மற்றும் ,ஹதரலியத்தை பிரதேச செயலகங்களாவன ஒரே பிரதேச செயலகபிரிவாகவும் காணப்பட்டது.பின்னர் நிருவாக இலகுவைகருத்திற்கொண்டு 1994 ல் தும்பனை,ஹதரலியத்தைஎன்ற இரண்டுபிரதேசசெயலகங்களாக வகுக்கப்பட்டன.2000ம்ஆண்டு 67 கிராமசேவகர் பிரிவுகளாகவகுக்கப்பட்டு தற்போதைய தும்பனை பிரதேச செயலகப் பிரிவானது உறுவாக்கப்பட்டுள்ளது.
 
தும்பனை என்ற பெயர் தொடர்பில் பல்வேறுவகையாக கிராமியக்கதைகள்,வரலாற்றுதடயங்கள் மறறும் புவியியல் ரீதியானதடயங்கள் காணப்படுகின்றன. இப்பிரதேசமானது கொப்பேகல,போலகல,அலகல்லஆகியகுன்றுகளை சூழ்ந்துள்ள பிரதேசமென்பதால் 'தும்பனே'என்றுஅழைக்கப்படுவதாகஒருகதை குறிப்பிடுகின்றது.கஜபாஅரசன் இந்தியாவிலிருந்து அழைத்துவந்தவர்களில் (துன் பனக - மூன்று ஜம்பது)பேரினை இங்குகுடியிருத்தியதால் 'தும்பனே' என்றபெயர் வந்ததாக ஒருகதை கூறுகிறது.
 
63.26 சதுரகிலோமீட்டர்நிலப்பிரதேசத்தினைக் கொண்ட தும்பனை பிரதேச செயலகப்பிரிவானது 67 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டுள்ளது.அத்தோடு 129 கிராமங்கள் மற்றும் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. 2012ம்ஆண்டு பிரதேசத்தினது சனத்தொகையானது 41000 ஆக காணப்பட்டது.
 
பெயர் முதல் வரை
திரு.எம்.பீ.வீரசேகர 1990 பெப்ரவரி 1995 பெப்ரவரி
திரு.பீ.எம்.கே.டப் வீரசிங்க 1995 மார்ச் 1999 ஒக்டோபர்
திருமதி. அனோமா.எஸ்.பல்லேவத்த (பதில்) 1995 டிசம்பர் 2000 ஜனவரி
திரு. விஜயரத்ன சகலசூரிய 2000 பெப்ரவரி 2000 டிசம்பர்
திரு.ஜீ.பீ அமுனுபொல 2000 டிசம்பர் 2002 பெப்ரவரி
திரு.எஸ்.பீ பெத்தேவல 2002 மார்ச் 2002 ஏப்ரல்
திரு.அனுர தர்மதாஸ 2002 ஏப்ரல் 2002 ஆகஸ்ட்
திரு.காமினி தஸநாயக்க 2002 செப்டம்பர் 2003 ஜூலை
பீ.ஜீ.எச்.என் சுகததாஸ (பதில்) 2003 ஜூலி 2003 செப்டம்பர்
டப்.எம்.டீ.பீ வன்னிநாயக்க 2003 செப்டம்பர் 2006 ஒக்டோபர்
திருமதி.டப்.எம்.கே.கே கருணாரத்ன

2006 ஒக்டோபர்

2009 ஏப்ரல்
திருமதி. எம்.டீ.கே.எஸ் சூரியம்பொல 2009 ஏப்ரல்  2011 டிசம்பர்
திரு.எஸ். சேனாநாயக்க 2011 டிசம்பர் 2013 ஏப்ரல்
திருமதி.துஸிதா என்.டப் ரணசிங்க 2013 ஏப்ரல் 2018 செப்டம்பர்
திருமதி.எஸ்.எம்.சி குணரத்ன 2018 செப்டம்பர் 2023 டிசம்பர்
திரு.டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார 2024 ஜனவரி 2024 பெப்ரவரி
திரு.டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார 2024 பெப்ரவரி 2024 ஜூன்
திரு.டி.எம்.கே.பி.வீரசிங்க 2024 ஜூன் 2024 ஆகஸ்ட்
திரு.சமீர நுவன் ரத்நாயக்க 2024 ஆகஸ்ட் இன்று வரை

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top