இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வையொட்டி எமது அலுவலக வளாகத்திலும் சுதந்திர தின விழா நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.டப்ளியு.ஈ.கே பண்டாரநாயக்க அவர்களால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன், இதன் போது அவர்களால் தேசிய சுதந்திர நிகழ்வும் நாட்டின் அபிவிருத்திக்கான குடிமக்களின் கடமைகளும் என்ற தலைப்பில் சிறிய ஒரு உரையும் நிகழ்த்தப்பட்டது.மேற்படி நிகழ்வையொட்டி அலுவலக வளாகத்தில் சிரமதான நடவடிக்கை ஒன்றும் மர நடுகை நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய சுதந்திர தின நிகழ்வையொட்டி தும்பனே பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


























